×

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 4 தொழிலாளர்கள் படுகாயம்

விருதுநகர் :  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி அருகே களத்தூரில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு தலா 3 லட்சமும்,  காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  ஏழாயிரம்பண்ணை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில் குமார், காசி ஆகியோர் பலியாகினர்.

மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களும் சாத்தூர், கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் சேதம் அடைந்துள்ளது. இதனிடையே பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்த10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Chattoor , சாத்தூர்
× RELATED சாத்தூரில் பராமரிப்பின்றி உள்ளது...