×

மழை வெள்ள பாதிப்பை தடுக்க ஸ்பாஞ்ச் சிட்டி திட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றின் பரப்பளவு முறையாக அளவீடு செய்யப்படவில்லை. சில இடங்களில் அரசு கட்டிடங்களும் உள்ளன. இதனால்தான் மழைக்காலங்களில் மக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகளவிலான வெள்ளம் மற்றும் வறட்சி காலத்தை சமாளித்திடும் வகையில் சீனா போன்ற சில நாடுகளில், ஸ்பாஞ்ச் சிட்டி ரெயின் வாட்டர் சிஸ்டம் (sponge city rain water system) என்ற முறையில் முறையாக வடிகால் அமைத்து மழைநீர் சேகரிப்படுகிறது.

இதைப்போன்ற திட்டத்தை தான் சிங்கப்பூர், மலேசியா ேபான்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. தமிழகத்திலும் பின்பற்றினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், மழை நீரை சேகரிக்க முடியும். எனவே, தமிழகத்தில் 1950ம் ஆண்டின் ஆவணங்களின்படி நீர்நிலைகளின் பரப்பளவை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வெளிநாடுகளைப் ேபால முறையான மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Sponge City , Case seeking implementation of Sponge City plan to prevent rain flood damage: Adjournment of hearing
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை