கண்ணியமான மொழியில் பேசுவதே கருத்து சுதந்திரம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

வார்தா: கண்ணியமான மொழியில், ஒழுக்கத்துடன் பேசி கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துங்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேசப் பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: ‘கண்ணியமான மொழியில், ஒழுக்கத்துடன் பேசி கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துங்கள். நம்முடைய எழுத்துக்கள் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். நமது கருத்து சுதந்திரத்தை வெளிபடுத்தும் போது ஒழுக்கமாக பேச வேண்டும். ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதே காந்தியின் கொள்கையாக இருந்தது. யார் மீதும் வேறு மொழிகள் திணிக்கப்பட கூடாது என்பதில் காந்தி உறுதியாக இருந்தார்’. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: