இல்லம் தேடி கல்வி திட்டம்: எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம்,  புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகரில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை, எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். திருவள்ளூர் ஒன்றியம், புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகரில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கி கல்வியை துவக்கி வைக்கும் விழா நடந்தது.

மாவட்டக் கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.பர்கத்துல்லா கான், மாவட்ட கவுன்சிலர் டி.தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் டி.எம்.தமிழ்வாணன், துணை தலைவர் பேபி மனோகரன்,  வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேல், பாபு, ஜெகன், செஞ்சி வீரன், முரளி, ரவிக்குமார், ரோஸ்மேரி, தமிழ் புதல்வன் ஆகியோர் வரவேற்றனர்.

பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி, இல்லம் தேடி கல்வியை துவக்கி வைத்தார். தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், கூளூர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில், ஆசிரியர் அருணன், திமுக நிர்வாகிகள் பி.கே.இ.கபிலன், அப்புன்ராஜ், சந்தோஷ், பி.கே.இ.நாகராஜ், சார்லஸ், லோகநாதன், தர், இளையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் மீகாவேல் நன்றி கூறினார்.

Related Stories: