×

திருவொற்றியூரில் வீடுகள் இடிந்த சம்பவம் 6 வாரங்களில் விரிவான அறிக்கை; மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: திருவொற்றியூர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் 24 வீடுகள் கொண்ட ஒரு பிளாக் கடந்த 27ம் தேதி  இடிந்து விழுந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கையாக, அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டதால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கட்டிடம் பலவீனமாக உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்திருந்தனர். இது சம்பந்தமாக நாளிதழ் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன், இதுகுறித்து 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tiruvottiyur ,State Human Rights Commission , Detailed report on house demolition incident in Tiruvottiyur in 6 weeks; Order of the State Human Rights Commission
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்