எழும்பூருக்கு பதிலாக மதுரை, காரைக்குடி ரயில் விழுப்புரத்தில் இருந்து இயங்கும்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே இன்று மற்றும் வருகிற 19ம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி மதுரை - சென்னை எழும்பூர் (12636) இடையே இன்று மற்றும் வருகிற 19ம் தேதி செல்லும் அதிவிரைவு ரயில், விழுப்புரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை எழும்பூர் - காரைக்குடி (12605) இடையே இன்று மற்றும் வருகிற 19ம் தேதி செல்லும் பல்லவன் விரைவு ரயில், சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி எழும்பூருக்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு ரயில் புறப்படும்.

Related Stories: