×

ரஹானே, புஜாரா தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், இருவருக்கும் எதிராகக் கடினமான முடிவுகளை திராவிட் எடுப்பார் என நான் நினைக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேச்சு

டெல்லி: இந்திய அணியில் மூத்த வீரர்கள் சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே இருவரும் ரன் ஸ்கோர் செய்யாவிட்டால் பயிற்சியாளர் திராவிட் யோசிக்காமல் அணியிலிருந்து தூக்கிவிட வேண்டும் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; ராகுல் திராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் இருந்தபோது, புஜாரா சிறப்பாக பேட் செய்து, இந்திய அணியில் திராவிட்டுக்கான 3-வது இடத்தைப் பிடிக்க கடும் நெருக்கடியை அவருக்கு அளித்தார். அதன்பின் அந்த இடத்தையும் புஜாரா பிடித்துக்கொண்டார்.

திராவிட் பயிற்சியாளராக வந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில் கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார். அதனால்தான் போதுமான வாய்ப்புகளை இருவரும் வழங்குவார்கள் என்று காத்திருக்கிறார். அவர்களின் திறனையும், என்ன பங்களிப்பு அவர்களால் செய்ய முடியும் என்பதையும் கவனிக்கிறார். உண்மையில் வாழ்க்கை ஒரு வட்டம். அது இப்போது திரும்புகிறது. ரஹானே, புஜாரா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், இருவருக்கும் எதிராகக் கடினமான முடிவுகளை திராவிட் எடுப்பார் என நான் நினைக்கிறேன். இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அணியிலிருந்து நீக்கப்படலாம். ஏனென்றால், புஜாரா, ரஹானே இருவருக்கும் நீண்ட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புஜாரா சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்கே தெரியும். அதேபோல அணியில் ஏன் நீடிக்க வேண்டும் என்பதை நிரூபிக்க ரஹானேவுக்கும் ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. எம்சிஜியில் ரஹானே சதம் அடித்தபின் இரு அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த ஆண்டுகளாக ஒரு சதம்கூட அடிக்காமல் அணியில் நீடிக்கும்போதே தனக்கு ஏராளமான வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை புஜாரா அறிவார். ஏராளமான இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களையும் பார்க்க வேண்டும். கோலி அணிக்குத் திரும்பினால், அணியிலிருந்து ஒரு வீரர் வெளியேற வேண்டும் இவ்வாறு கூறினார்.


Tags : Rahane ,Pujara ,Dravit ,Dinesh Karthik , As Rahane and Pujara continue to falter, I think Dravid will take tough decisions against both: Dinesh Karthik
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!