உறவினர், பணியாளருக்கு தொற்று: பிரியங்கா காந்தி தனிமை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள உறவினர் மற்றும் பணியாளருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், பிரியங்கா காந்தி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எங்களது குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைபடி என்வை பரிசோதித்துக் கொண்டேன். எனக்கு கொரோனா ெநகடிவ் ரிசல்ட் வந்தது.

இருந்தும் மருத்துவர்களின் ஆலோசனைபடி அடுத்த ரிசல்ட் வரும் வரை என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக உத்தர பிரதேச தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரியங்கா காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: