×

புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.!

சென்னை: புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அதாவது, தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் பொங்கல் சிறப்பு திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதி எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கி தோட்ட துளைத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஒப்படைக்கப்பட்டது என்றும் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை சிறுவனின் தந்தை கலைச்செல்வன் பெயரில் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Tags : Minister ,Chakrabarty , Minister Chakrabarty announces that Pongal special package will be given to new family card holders.
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...