×

டெஸ்ட் போட்டிகளில் இடத்தை தக்க வைக்க புஜாரா, ரகானேவுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது: கவாஸ்கர் சொல்கிறார்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதுகுவலி காரணமாக கேப்டன் கோஹ்லி ஆடாததால் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 26 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர் சீனியர் வீரர்களான புஜாரா (3) மற்றும் ரஹானே (0) ஆகிய இருவருமே வந்த வேகத்தில் நடையை கட்டினர். அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரியும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ராகுல் அரைசதம் அடித்தார். விக்கெட்கீப்பர் ரிஷப் பண்ட் 17, ஷர்துல் தாகூர் டக் அவுட்டானார். முகமது ஷமி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய அஷ்வின் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஜஸ்ப்ரித் பும்ரா 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முன்வரிசையில் முன்னணி வீரர்கள் புஜாரா, ரகானே இருவரும் படுமோசமாக ஆட்டமிழந்ததால்தான் இந்திய அணி 202 ரன்களுக்கு சுருண்டது. புஜாரா, ரகானே இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை. ஆனாலும் அவர்களின் கடந்த கால பங்களிப்பை மனதில் வைத்து, அதற்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக அதிக வாய்ப்புகளை தேர்வுக்குழு அளித்தும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்டில் வாழ்வா சாவா என்ற நிலையில், கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆனால் இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:- இந்த டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸ் புஜாரா மற்றும் ரகானே ஆகிய  இருவருக்கும் மிக முக்கியமானது. அதாவது டெஸ்ட் அணியில் அவர்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ளவும், காப்பாற்றிக்கொள்ளவுமான கடைசி வாய்ப்பு ஆகும். எனவே அடுத்த இன்னிங்சிலும் அவர்கள் சொதப்பினால் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினம்.இவ்வாறு அவர் கூறினார்.

அம்பயரிடம் மன்னிப்பு கேட்ட ராகுல்
இந்திய அணியின் இன்னிங்சின் 5வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை வீச ரபாடா ஓடிவர, பந்துவீசப்போகும் நேரத்தில் பந்தை எதிர்கொள்ளாமல், தான் இன்னும் தயாராக இருக்கவில்லை என்று கூறி ஒதுங்கினார் ராகுல். பந்துவீசப்போகும் நேரத்தில் ராகுல் ஒதுங்கியதால், பந்துவீசாமல் கஷ்டப்பட்டு நிறுத்தினார் ரபாடா. இது ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு கடினமான விஷயம். இதையடுத்து, “சீக்கிரம் பேட்டிங்கிற்கு தயாராகுங்கள் ராகுல்” என்று அம்பயர் எராஸ்மஸ் ராகுலிடம் கூறினார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. உடனடியாக, மன்னிப்பு கேட்டார் ராகுல். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Tags : Pujara ,Ragane ,Kavaskar , For Pujara, Raghane to retain place in Test matches There is only one chance: Gavaskar says
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை...