கண்ணூர் பல்கலைக்கழக பிரச்சனையால் ஆளுநர்- முதல்வர் மோதல்: துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடு என ஆளுநர் புகார்

திருவனந்தப்புரம்: கேரளாவில் கண்ணூர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதமாக அனைத்து கோப்புகளையும் முதலமைச்சர் அலுவலகத்திற்கே ஆளுநர் திருப்பி அனுப்பி விடுவது இருவருக்குமான மோதலை அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணூர் மத்திய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு மோதல் வெடித்தது. பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்பது ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் பீலீஜ் படிப்பை அறிமுகம் செய்வதற்காக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற ஆளுநர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை துணைவேந்தர் திருப்பி அனுப்பியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவமடைந்த ஆளுநர் ஆரிஃப் கான் கடந்த ஒரு மாத காலமாக 13 பல்கலைக்கழகங்களின் அனைத்துக் கோப்புகளையும் முதலமைச்சர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பி வருகிறார். பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை மீண்டும் ஏற்கபோவதில்லை என்றும் அவர் கூறி வருகிறார். கண்ணூர் பலக்லைக்கழகத்தில் காணப்பட்ட அரசியல் தலையீடுகளை ஆளுநர் வெளிப்பப்டையாக தெரிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கண்ணூர் பலக்லைக்கழக பிரச்சனை அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்திருக்கிறது.

Related Stories: