புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுசிலா பாய் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்று வரும் சிறார்களுக்கான தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை தவுந்தரராஜன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; புதுச்சேரியில் 83 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தற்போது வரை 454 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்னும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளதால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும், தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: