பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடமே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடமே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கரும்புகளை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. பன்னீர் கருப்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கருப்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: