திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை - ரயில்வே டி.ஐ.ஜி விளக்கம்

சென்னை: திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக ரயில்வே டி.ஐ.ஜி பேட்டியளித்துள்ளார். ரயில் நிலையத்தில் கொள்ளை போனது தொடர்பாக டீக்காராம் அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. ரயில்வே போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் ஊழியர் டீக்காராம், தனது மனைவியுடன் சேர்ந்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. டீக்காராம் திருடிய ரூ.1.32 லட்சமும் மீட்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் டீக்காராம் மூழ்கி உள்ளதால் அவருக்கு பணத்தேவை அதிகம் உள்ளது. அவரது நண்பர் உள்பட அனைவரிடமும் நிறைய கடன் பெற்றுள்ளார் டீக்காராம். டீக்காராம் அவரது பணி நேரத்திலேயே கொள்ளை நடத்தி உள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் சிசிடிவி கேமரா வைப்பது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.

Related Stories: