நெல் கொள்முதல் நிலையத்தில் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் செல்லும் 24 மணி நேரத்திற்குள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். பிரச்சனைகளை தவிர்க்க அதற்கான கட்டமைப்பு வசதியை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும், அரசு நடவடிக்கை எடுத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே, எந்த பிரச்சனையும் ஒரே இரவில் சரியாகிவிடாது; நெல்லை விதைக்கும்போதே இதன் நடவடிக்கைகளை துவங்கலாமே, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள் ஆனால் அதே பாதிப்பு, அதே பிரச்சினை மீண்டும் எழுவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: