கோவை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட கேரள காங். பிரமுகர்!: 7 தோட்டாக்கள் பறிமுதல்..போலீசார் விசாரணை..!!

கோவை: பழைய கை துப்பாக்கி, 7 தோட்டாக்களுடன் பெங்களூரு செல்ல முயன்ற கேரளா மாநில காங்கிரஸ் பிரமுகர் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ள இவர், பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவரான கே.எஸ்.பி. தங்கல் என்பவர் ஆவார். இவர் பெங்களூரு செல்வதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வந்தார். அவரது உடமைகளை அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து பார்த்ததில் அதில் 22 ரக கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது.

அத்துடன் 7 தோட்டங்களும் இருந்தன. இந்த துப்பாக்கிக்கான உரிமத்தின் நகல் அவரிடம் இல்லை என்பது உறுதியானதால் அவரை பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தங்கல் பெங்களூரு சென்று அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல இருந்ததாக கூறினார். பழைய கை துப்பாக்கியை என்ன காரணத்திற்காக தன்னுடன் எடுத்து வந்தார் என்பது குறித்தும், இந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் பீலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: