சிம்ஸ் பூங்கா பகுதியில் கடையில் குழந்தைபோல் பழம் வாங்கி தின்னும் மலபார் அணில்கள்-சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

குன்னூர் :  குன்னூர் சிம்ஸ் பூங்கா வளாகத்தில் உள்ள பழக்கடையில் நான்கு மலபார் அணில்கள் பழங்களை பெற்று உண்டு செல்வதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.நீலகிரி மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்டுள்ளதால்  பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக அடர்ந்த  காடுகளில் மலபார் அணில்கள் வகைகள் உள்ளன. மரங்களில் சுற்றித்திரியும் இந்த வகையான மலபார் அணில்கள் பழங்களை உண்டு வாழ்கின்றன. மேலும் இவை மிகவும் மென்மையான குணாதிசயங்களை கொண்டதால் மனிதர்களை கண்டாலே காடுகளுக்குள் ஓடி மறைந்துவிடும்.

அடர்ந்த காடுகளில் வாழக்கூடிய இவை  குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் உள்ள பழக்கடைகளில் மனிதர்களிடம் இருந்து பழங்களை பெற்று உண்டு வாழ்ந்து வருகிறது.

 தினந்தோறும் அங்குள்ள பழக் கடைகளுக்கு மலபார் அணில் வருவதால் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலபார் அணில் கடைகளில் பழங்களை உண்பதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். சிம்ஸ் பூங்கா வளாகத்தில் நசீமா என்பவர் பல ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வருகிறார்.

இவரின் கடைக்கு தினந்தோறும் மலபார் அணில் ஒன்று வந்து பழங்களை பெற்று உண்டு செல்லும். காலப்போக்கில் தற்போது நான்கு  மலபார் அணில்கள் வந்து பழங்களை பெற்று உண்டு செல்கின்றன. குழந்தையைபோல பழத்தை பெற்றுக்கொண்டு மரங்களின் மீது அமர்ந்து உண்டு செல்கின்றன.பழங்களை பெற்று உண்டு செல்லும் மலபார் அணிலை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

Related Stories: