கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மாண்டியா: கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதியை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேருந்துகளில் தமிழகம் வந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்களில் இதுவரை 35 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேருந்துகளில் 100க்கும் அதிகமானோர் வந்த நிலையில் இன்னும் ஒரு பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: