மன்னார்குடியில் தமிழர்களின் மரபுகலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்கும் சிறுவர், சிறுமியர்கள்

மன்னார்குடி : தமிழர்களின் மரபுக்கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் தற்காப்பு கலையாக மட்டுமல்லாது உடல் மற்றும் மன நலனுக்கும் உகந்த கலையாகவே திகழ்கிறது.

தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம் பாட்டம் திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கு பெறும் அளவிற்கு வளர்ந் துள்ளது.

இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளத்திலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப் படுகிறது.தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக் கவும், தமிழர்களின் வீரக்கலை யான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீ கரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுரை யின் படி கோரப்பட்டது.

அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீ கரித்து \”புதிய கேலோ இந்தியா\” திட்டத்தின் கீழான \”விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்\” என்ற கூறி சிலம் பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரிததோடு தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது பாரம் பரிய மிக்க சிலம்பக் கலையை பாதுகாக்கும். இந்தக் கலையை சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பேதமின்றி அனைவரும் கற்றுக்கொண்டு, உடல் மற்றும் மன நலனை பேணி காப்பது இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமாக உள்ளது.

இதுகுறித்து, மன்னார்குடியில் பாரதி சிலம்பாட்ட பள்ளி ஒன்றை துவங்கி சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகளை அளித்து வரும் சிலம்ப ஆசிரியை பத்மாவதி கூறுகையில், சிலம்பாட் டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன.

தற்காப்பு கலையின் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இத்தன்மை நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள அவசியமாக தேவைப்படும்.தற்காப்பு, உடல் நலம், மன நலம் என பல நன்மைகள் ஒரு சேர பின்னிப் பிணைந்து இருக்கும் இந்தச் சிலம்ப கலையானது அழியாமல் இருந்திட வேண்டும்.

இந்த கலை நம் எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கப்பட வேண்டும். தற்காப்புக்காக மட்டுமன்றி, எனக்கு அடுத்து வருகின்ற தலை முறைக்கும் இந்தக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும், பெண்களும் இதன் பயனை முழுமையாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறுமியர், பெண்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளித்து வருகிறேன்.எனவே, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் இருந்து அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு பெண்களும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை முறையாக கற்றுக் கொள்வது இன்றைய கால கட்டத்தில் அவசியமாக உள்ளது என்றார்.

Related Stories: