கொரோனா அதிகரிப்பு எதிரொலி; பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்.! பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடல்

பஞ்சாப்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.  பஞ்சாப்பில் தற்போது 1,741 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,87,530 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 16,651 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் எதிரொலியால் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் கல்வி முறை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசி டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழிற்சாலைகள் மற்றும் இதர இடங்களில் பணிபுரிய முடியும்.

திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், பார் ஸ்பா ஆகிய இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளருடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: