தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வோர் கண்காணிப்பு நெல்லை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிரடி சோதனை

நெல்லை : ரயில்களில் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வோரை கண்காணிக்கும் வகையில் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவினர் அதிரடி சோதனை மேற்ெகாண்டனர்.தென்மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளிடம் ரயில் பயணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வை மேற்கொள்ள மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக எளிதில் தீ பற்றும் பொருட்களான பட்டாசு, மண்ணெண்ணெய், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வோரை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் கிரண், மதுரை கோட்ட மோப்பநாய் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் குழுவினர் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தி, தீ பற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். மேலும் ரயில் நிலையம் முழுவதும் மோப்பநாய் சோதனையும் நடந்தது. தீ பற்றும் பொருட்களை கொண்டு செல்வதால், ஏற்படும் ஆபத்துக்களை விளக்கி துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். சுமார் 6 மணி நேரம் நெல்ைல ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் மற்றும் பிளாட்பார்ம்களை சோதனையிட்டு பரிசோதித்தனர்.

Related Stories: