×

ஆரணி பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு-டிஎஸ்பி பங்கேற்பு

ஆரணி : ஆரணியில் டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து நேற்று ஒலிபெருக்கி ’மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால் தான் மீண்டும் ஊரடங்கு வராமல் தடுக்க முடியும் என்றார்.

தொடர்ந்து, ஆரணி பழைய பஸ்நிலையம், கோட்டை சாலை, காந்திசாலை ஆகிய பகுதிகளில் உள்ள  ஓட்டல்களில் 50 சதவீத  வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்துகின்றனரா? ஏசி பயன்படுத்தாமல் இருக்கிறதா, ஓட்டல் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்களா, அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை
முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

அப்போது, ஓட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஏசி பயன்படுத்த கூடாது. சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுத்தப்பட்டது.முன்னதாக, பழைய பஸ்நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியவும், பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என  டிரைவர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags : Orani , Arani: The town inspector and police led by DSP Kotteeswaran in Arani, the public near the Arani Town clock tower,
× RELATED அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்