குஜராத் - ராமேஸ்வரம் சென்ற பேருந்து: பர்மிட் இல்லாமல் சென்றதால் திருச்சியில் நிறுத்திவைப்பு

திருச்சி: குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்றது. நேற்று இரவு, திருச்சி பிராட்டியூர் அருகே வந்தபோது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள், பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பஸ்சுக்கு உரிய பர்மிட் இல்லாமல் வந்தது தெரியவந்தது . இதைத் தொடர்ந்து , அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் பஸ்சில் வந்தவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் அதிகாரிகள் பஸ்சை விடுவிக்காமல், பெண் பயணிகள் உட்பட 41 பேருடன் இரவு முழுவதும் பிராட்டியூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.

Related Stories: