×

ராஜேந்திரபாலாஜி எங்கே? வக்கீலிடம் நீதிபதி கேள்வி

மதுரை: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ேமாசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளார். தன்னையும், தன் குடும்பத்தினரையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தக் கூடாது என ராஜேந்திரபாலாஜியின் சகோதரி லட்சுமி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாரீஸ்குமார், போலீசார் எவ்வித அனுமதியுமின்றி தனது வீட்டில் டிச. 29ல் சோதனையிட்டதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி சிரித்துக் கொண்டே, ‘‘மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எங்கே இருக்கிறார்’’ என்றார். அப்போது வக்கீல் மாரீஸ்குமார், ‘‘அவரது முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வருகிறது. அதன்பிறகே அவர் குறித்து தெரிய வரும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘மாஜி அமைச்சரின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக அவரது வீட்டில் சோதனையிடுவது ஏற்புடையதல்ல. வக்கீல் வீட்டில் நடந்த சோதனை குறித்தும், சோழவந்தான் ஆய்வாளர் மதுரை நகர் பகுதிக்குள் வந்து சோதனையிட்டது தொடர்பாகவும் போலீசார் தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 7க்கு தள்ளி வைத்தார்.

Tags : Rajendrapalaji , Where is Rajendrapalaji? Judge question to attorney
× RELATED ரூ.3 கோடி மோசடியில் தலைமறைவான...