அனைத்து கட்சியையும் ஒருங்கிணைப்போம்; அண்ணாமலை பேச்சை கேட்டா சிரிப்புதான் வருது: செல்லூர் ராஜூ கிண்டல்

மதுரை: அனைவரையும் ஒருங்கிணைப்போம் என்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சைக் கேட்டால் சிரிப்பு தான் வருது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை வளர்ச்சிக்கு அமைச்சர்கள் அதற்கான நிதி ஆதாரத்தை பெற்றுக்கொடுத்து  உதவ வேண்டும்.

அற்புதமான பாரதப்பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார். அவரை வரவேற்க வேண்டியது நம்முடைய எண்ணம். எங்கள் தலைமையின் எண்ணம். அனைத்து கட்சியையும் ஒருங்கிணைப்போம் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சிரிப்பைத்தான் தருகிறது. அண்ணாமல... அண்ணாமல.... (சிரிக்கிறார்). இதில் இருந்து நீங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அரசியல்ரீதியிலான கருத்துக்களை எங்கள் தலைவர்கள் பேசுவார்கள்’’ என்றார்.

Related Stories: