×

நிலப்பிரச்னையில் இளம்பெண் குத்திக்கொலை: சித்தப்பா கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பம், கூவம் ஆற்றங்கரையோர பகுதியில் வசிப்பவர் வெங்கடாஜலபதி. இவரின் மனைவி லோகநாயகி. இவர்களது மகள் சிவரஞ்சனி (27). இவர் பிசிஏ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். வீடு மற்றும் நிலம் சம்பந்தமாக லோகநாயகியின் தங்கை சரஸ்வதி பாலச்சந்திரன் குடும்பத்துக்கும் லோகநாயகி குடும்பத்தாருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இதுசம்பந்தமாக நேற்ற காலை லோகநாயகியிடம் பாலச்சந்திரன் கடும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி புகார் கொடுக்கப்போவதாக சொல்லிவிட்டு லோகநாயகி அங்கிருந்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் சிவரஞ்சனி தனது பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். ஆத்திரத்துடன் வீட்டுக்குள் புகுந்த பாலச்சந்திரன் அங்கிருந்து கத்தியை எடுத்து சிவரஞ்சனியை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த துடிதுடித்த சிவரஞ்சனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சிவரஞ்சனி இறந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி.சந்திரதாசன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பாலச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Sitappa , Chittappa arrested for stabbing teenager in land dispute
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகனின் சித்தப்பா...