ஆண்டுக்கு 8 இலவச காஸ் சிலிண்டர் பெண்களுக்கு மாதம் ரூ.2000: சித்து வாக்குறுதி

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால், ஆண்டுக்கு 8 இலவச காஸ் சிலிண்டர், பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இங்கு காங்கிரஸ், பாஜ, சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பஞ்சாபில் பர்னாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, ``பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், ஆண்டுக்கு 8 இலவச காஸ் சிலிண்டர், பெண்களுக்கு மாதம் ரூ.2000, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகளின் கல்லூரி படிப்புக்காக ரூ.20,000, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.15,000, 5ம் வகுப்பில் பாஸ் ஆகும் மாணவிகளுக்கு ரூ.5,000ம் வழங்கப்படும். மாணவிகளுக்கு மடிக்கணினி,இரு சக்கர வாகனம் வழங்கப்படும்’’ என கூறினார்.

Related Stories: