×

துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு: திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை  அருகேயுள்ள பசுமலைப்பட்டியில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் கடந்த 30ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட போது துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா தவறுதலாக குடியிருப்பு பகுதிக்கு சென்றதில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் மீது தோட்டா பாய்ந்தது. அவருக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட நிலையில் இன்று சிறுவன் உயிரிழந்தான். கீரனூர் காவல்துறையினர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கடந்த 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை சிறுவன் உயிரிழந்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும். நீதிவிசாரணை நடத்த வேண்டும். சிறுவன் குடும்பம் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான குடும்பம் என்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Tiruchi - Pudukkotta road , Struggle
× RELATED ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை...