புதுக்கோட்டை மாவட்டம் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். தலையில் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். கடந்த 30ஆம் தேதி பசுமலைப்பட்டி காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறியதில் சிறுவன் படுகாயமடைந்தான்.

Related Stories: