×

புதுவை பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி: கடந்த டிசம்பர் 25ம்தேதி முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். அவ்வாறு வந்த பலர் புத்தாண்டு கொண்டாடிவிட்டு செல்லும் நோக்கில் புதுச்சேரியில் தங்கினர். மேலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கென்றே பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து இளைஞர்களும்,  இளம்பெண்களும் வேறு பல தரப்பினரும் புதுச்சேரிக்கு வரத் தொடங்கினர். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்ததால் புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் வசமானது.

இந்தியாவின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் புதுச்சேரியில் இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டனர். இதனால் புதுச்சேரியின் தங்கும் விடுதிகள் நிரம்பின, வியாபாரமும் பெருகியது. இந்நிகழ்ச்சியில் புத்தாண்டு விடுமுறை முடிந்து நேற்று சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு, வேலை செய்யும் நகரங்களுக்கு  திரும்பினர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து  காணப்பட்டது.

தொடர் விடுமுறை முடிந்து வெளியூர்களில் பணிபுரியும்  புதுச்சேரிவாசிகளும், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களும் சென்னை  உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல புதிய பஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. சில பேருந்துகளில் முண்டியடித்து ஏறினர். இதனால் தள்ளுமுள்ளு  ஏற்பட்டது.

Tags : Puduvai , Wave crowd at Puduvai bus stand
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...