×

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி போராடி வெற்றி

மாட்ரிட்: மாட்ரிட் அருகே பெலார்சிஸ் தீவில் உள்ள பால் டி மல்லோர்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பார்சிலோனா அணி கடும் போராட்டத்திற்கு பின்னர் மல்லோர்கா அணியை வீழ்த்தியது. ஐரோப்பிய கோப்பையின் ஒரு அங்கமான லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் ஐரோப்பாவிற்கு உட்பட்ட பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. ரியல் மாட்ரிட், பார்சிலோனா உட்பட 20 கிளப்கள் இந்த தொடரில் மோதிக் கொண்டிருக்கின்றன. கால்பந்து ரசிகர்களை பெரிதும் ஈர்க்கக் கூடிய லா லிகா தொடர் போட்டிகள், தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, பரபரப்பே இல்லாமல் நடந்து வருகிறது.

முன்னணி வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு போட்டியும் நடக்குமா, நடக்காதா என்ற நிலையில் உள்ளது.
இருப்பினும் பார்சிலோனா-மல்லோர்கா கிளப்புகளுக்கு இடையேயான போட்டி, அட்டவணைப்படி இன்று அதிகாலை நடந்தது. கடும் பரிசோதனைகளுக்கு பின்னரே போட்டி நிர்வாகிகள், வீரர்கள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இரு கிளப்புகளின் வீரர்களும் வழக்கமான பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.

50 சதவீதத்திற்கும் குறைவான பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். போட்டி துவங்குவதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக வீரர்கள் ஸ்டேடியத்திற்கு வந்து சேர்ந்தனர். நேரடியாக மைதானத்திற்கு வந்து அணி வகுத்து நின்ற பின்னர், குறித்த நேரத்தில் போட்டி துவங்கியது. துவக்கத்தில் இரு அணிகளின் வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தையே கடைப்பிடித்தனர். பார்சிலோனாவின் வழக்கமான ஆக்ரோஷம் இல்லாததால் ரசிகர்களும் சோர்வடைந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலும் பந்து, பார்சிலோனா அணி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

ஒரு வழியாக ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் முன்கள வீரர் லூக் டி ஜாங், ஒரு ஃபீல்டு கோல் அடித்து, பார்சிலோனா அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 2ம் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இறுதியில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் மல்லோர்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அட்டவணையில் (19 போட்டிகளில் 8 வெற்றி) பார்சிலோனா அணி, 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மல்லோர்கா கிளப், 19 போட்டிகளில் 4 வெற்றி என்ற நிலையில் 15ம் இடத்தில் உள்ளது.

Tags : La Liga ,Barcelona , La Liga football: Barcelona team struggles to win
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...