புதுவையில் பள்ளிகள் மூடப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: புதுச்சேரியில் 2 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக தொற்று இல்லை. ஏற்கனவே 2 ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுள்ளோம். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும். ஆன் லைன் கல்வியை எந்த அளவுக்கு பிள்ளைகளுக்கு போதிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் கொரோனா தாக்கத்தின் சூழலுக்கு ஏற்ப புதுவையில் பள்ளிகளை மூடுவதா இல்லையா என்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றார்.

Related Stories: