கும்பகோணத்தில் பெய்த கனமழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை!!!

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெய்த கனமழை காரணமாக 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏரகரம் மற்றும் மூப்பக்கோவில் கிராமங்களில் பயிடப்பட்டிருந்த 50-ற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன.

ஏக்கர் ஒன்றிக்கு ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை செலவு செய்த நிலையில் திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் 20 நாட்களில் வருவாய் தரக்கூடிய பயிர் நீரில் மூழ்கியதால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள் தங்களின் இழப்புகளை ஈடு செய்ய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.         

Related Stories: