'குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது': சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் வண்ணவிளக்குகளை தவறாக பயன்படுத்தியதாக 4,456 வழக்குகளும், கருப்பு ஸ்டிக்கர் தொடர்பாக 4,697 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான நம்பர் பிளேட் பயன்படுத்துவது தொடர்பாக சுமார் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்போது எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்கள் தனிப்பட்ட வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தினால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் தேசிய மற்றும் மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதி இத்தகைய செயல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினர். குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்றும் தெரிவித்த அவர், தீர்ப்பை நாளைய மறுநாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: