தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

சென்னை: வடகிழக்கு காற்றலையின் காரணமாக வரும் 6 மற்றும் 7 தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று அந்தமையம் கூறியதுள்ளது. வரும் 5 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 6 மற்றும் 7 தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அந்தமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மண்டபம், தங்கச்சிமடத்தில் 5 செ.மீ. மழையும், மணிமுத்தாறு, பாபநாசத்தில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.கடம்பூரில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.  

Related Stories: