’விவசாயிகள் மரணம் குறித்து விசாரித்த போது பிரதமர் மோடி ஆணவத்துடன் பேசினார்’: மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு

சண்டிகர்: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் மரணம் குறித்து விசாரித்த போது, பிரதமர் மோடி ஆணவத்துடன் பேசியதாக  மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 வேளாண் சட்டங்கள் ஒன்றிய அரசால் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இருந்தே விவசாயிகளுக்கு ஆதரவாக  மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசி வருகிறார். இந்த நிலையில் ஹரியானாவில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விவாதிதாக கூறினார்.

அப்போது மோடி மிகவும் ஆணவத்துடன் நடந்து கொண்டதாக  மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குறிப்பிட்டார். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டதாக தாம் கூறிய போது, அவர்கள் தனக்காக இறந்தார்களா என மோடி ஆணவத்துடன் கேட்டதாகவும் மாலிக் கூறியுள்ளார். 5 நிமிட சந்திப்பில் இருவரிடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாக குறிப்பிட்ட சத்யபால் மாலிக், நீங்களே இந்த நாட்டின் மன்னர் என்று மோடியிடம் சண்டையிட்டு வந்ததாக கூறினார். ஒரு நாய் இறந்தால் கூட இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.

Related Stories: