தொண்டாமுத்தூர் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

தொண்டாமுத்தூர் : கோவை அருகே தொண்டாமுத்தூர் அருகே உள்ளது வண்டிக்காரனூர். இந்த கிராமத்தை  கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் ஆடு மேய்த்தபோது ஆட்டுக்குட்டி ஒன்று திடீரென மாயமானது இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடிப் பார்த்ததில் முட்புதரில் ஆட்டை விழுங்கிய படி மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாம்பு பிடிப்பாளர் தன்ராஜ், வேட்டை தடுப்பு காவலர் முருகன் ஆகியோர் 12  அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது விழுங்கிக்கொண்டிருந்த ஆட்டு குட்டியை வெளியே துப்பியது. இருந்தும் ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது. மீட்ட மலைப்பாம்புவை தாளியூர் ஆணைமடுவு பள்ளத்தாக்கில் விடப்பட்டது.

Related Stories: