×

தொண்டியில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் கவலை

தொண்டி : தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற் களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் சுமார் 42 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாமல் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த வருடம் ஆரம்பம் முதலே மழை பெய்ததால் அனைத்து கண்மாய் மற்றும் குளங்களும் நிரம்பிவிட்டன.

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் பயிர்கள் உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். நெல்மணிகள் தண்ணீரில் கிடப்பதால் முளைத்து விடுமோ என்று கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி பிரபு கூறுகையில், கடந்த வருடங்களில் மழை பெய்யாமல் விவசாயம் கெட்டது.  இந்த வருடம் கடைசி நேரத்தில் மழை பெய்து விவசாயம் கெட்டு விடுமோ என்று பயமாக உள்ளது. நெல்மணிகள் தலை சாய்ந்துள்ள நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இன்னும் சில நாள் மழை தொடர்ந்தால் மீண்டும் பயிர் முளைத்து விடும். பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி விடும். மேலும் பெரும் நஷ்டமும் ஏற்படும் என்றார்.

Tags : Tondi , Tondi: It has been raining heavily in and around Tondi for the last few days. Thus the crops were ready for harvest
× RELATED விழிப்புணர்வு கூட்டம்