×

2 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாத நெல்லை டவுன்-குற்றாலம் சாலையில் ஒரு பகுதி சீரமைப்பு

நெல்லை : கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கவனிக்கப்படாமல் இருந்த நெல்லை டவுனில் உள்ள குற்றாலம் சாலை பாதியளவு சீரமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக சீரமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் நடக்கிறது. இரு திட்டப்பணிகளும் ஒரே நேரத்தில் நடப்பதால் மாநகரில் பெரிய, சிறிய சாலைகள் மற்றும் சிறு தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளன. இவை மீண்டும் சரிசெய்யப்படாமல் உள்ளது.

 நெல்லையின் முக்கிய சாலைகளில் ஒன்றாக டவுன் குற்றாலம் சாலை உள்ளது. தமிழக அளவில் பயணிப்பவர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்து வருபவர்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றாலம் சாலை உடைக்கப்பட்டு சீரமைக்கப்படாமல் கிடந்தது. இதனால் இந்த சாலையை கடப்பதற்கு வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மழை காலத்தில் நீர் சூழ்வதாலும் மற்றகாலங்களில் புழுதி பறப்பதாலும் வாகனஓட்டிகள் பெரும் சோதனையை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் முதல் வாரத்திற்கு பின்னர் ஓய்வு எடுத்தது. வெயில் அடிக்கத்தொடங்கிய நிலையில் இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது பாதியளவு போட்ட நிலையில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்கிறது.

இதனால் சாலை சீரமைப்பு பணி தொடரவில்லை. வாகன ஓட்டிகள் சீரமைக்கப்பட்ட சாலை பகுதியில் மகிழ்ச்சியாகவும் மற்ற பகுதியில் கவலை மற்றும் கவனமுடன் பயணிக்கின்றனர்.
சாலை சீரமைக்கப்பட்ட பகுதியிலும் சில இடங்களில் உடனடியாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தரமாக சீரமைக்கவேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Nellai Town-Courtallam road , Nellai: Courtallam Road in Nellai Town, which has been neglected for the last 2 years, has been partially rehabilitated.
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...