2024 நாடாளுமன்ற தேர்தலில் கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்தி விடலாம்: ஆ.ராசா எம்.பி பேச்சு.!

சென்னை: கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி விடலாம் என திமுகவின் துணை பொதுச் செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமை கட்சி சார்பில் பெரியாரியல் பேரறிஞர் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஆ.ராசா, பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையை பின்பற்றியவர் ஆனைமுத்து என புகழாரம் சூட்டினார். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் தானும் ஒரே மாவட்டத்தில் பிறந்தவர்கள் எனவும், ஒரு தந்தைக்கு ஆற்றக்கூடிய கடமையை ஒரு மகன் எப்படி செய்வானோ அப்படியான உணர்வோடு இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி விடலாம் என்றும் ஆ.ராசா கூறினார்.

Related Stories: