×

உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் நேரடி விசாரணையை தொடங்கும் அறிவிப்பை ரத்து செய்தது

சென்னை : உச்சநீதிமன்றத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் நேரடி விசாரணையை தொடங்கும் அறிவிப்பை ரத்து செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் இன்று துவங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரிப்பு காரணமாக காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

நேரடி மற்றும் கலப்பு விசாரணை முறை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் தாக்கல், உத்தரவு நகல் கோரிய விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும், தவிர்க்க முடியாத நிலையில் குறிப்பிட்ட கவுண்டர்கள் அல்லது பிரத்யேக பெட்டிகளில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விசாரணை முறை, இன்று மீண்டும் அமலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒமிக்ரான் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அந்த முடிவை தற்காலிகமாக சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.


Tags : Supreme Court ,Chennai High Court , உயர்நீதிமன்றம்
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...