விருதுநகர் : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.