×

ஜவுளி-காலணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அழுத்தத்தின் காரணமாகவும், ஜவுளித் தொழில் உரிமையாளர்களின் எதிர்ப்பு குரல் காரணமாகவும், ஜி.எஸ்.டி. 46-வது கவுன்சில் கூட்டத்தில் ஜவுளித்துறைக்கான ஜி.எஸ்.டி.வரி உயர்வை மத்திய அரசு தள்ளிவைத்திருப்பதை பேரமைப்பு வரவேற்கின்றது. அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பயன்பாட்டிற்கான ஜவுளிப் பொருட்களின் மீதான வரி ஏற்றம் ஏற்புடையது மட்டு மல்ல, எனவே ஜி.எஸ்.டி வரி உயர்வை முழுமையாக தவிர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதே போல 46வது கவுன்சில் கூட்டத்தில் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை தவிர்த்து அறிவிப்பு வெளியிடாதது காலணி தொழில் துறையினர், வணிகர்கள் மற்றும் பயனாளிகளான பொது மக்களுக்கும் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் 1000 ரூபாய்க்கு குறைவான காலணிகளுக்கும் இந்த வரி உயர்வு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே காலணிகள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Wickramarajah , Textiles, GST, Tax Exemption, Wickramarajah,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...