×

கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களின் செலவினங்களை மட்டும் பதிவு செய்யாமல், வருவாய் விவரங்களை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய ேவண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு: இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் வரும் அனைத்து அறநிறுவனங்களின் ஒவ்வொரு ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டம் கடந்த 1959ம் ஆண்டு இந்து சமய அறக்கொடைகள் சட்டம் பிரிவு 86(6)ன் கீழ் அங்கீரிக்கப்படுகிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்தேச வரவு செலவு திட்டம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தற்சமயம் உத்தேச வரவு செலவு திட்டம் அனுமதி வழங்கும்போது, செலவு தொகைகளுக்கான அனுமதி மட்டும் வழங்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. வரவினத்திற்கான எந்த ஒரு விவரமும் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இந்த குறைப்பாட்டினை சீர் செய்யும் பொருட்டு நடப்பாண்டிற்கான செலவுகளின் விவரத்துடன் வரவினத்திற்கான விவரங்களையும் அந்தந்த கோயிலின் பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர், மேலாளரின் ஒப்புதல் பெற்று பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்படுகிறது. அதில், நிலங்கள் மூலம் குத்தகை மூலம் ரொக்க வருமானம், குத்தகை மூலம் தானியம் அளவும் விகிதம், இதர இனங்களில் இருந்து வருமானம்.

கட்டிடம் மற்றும் மனை வாடகை மூலம் வீடு, கடை வாடகை, காலி மனை வாடகை, தற்காலிக கடை வாடகை, காணிக்கைகளும், உபயங்கள் மூலம், ரொக்கம், பொருள், உண்டியல் வருமானம், காணிக்கை பொருட்கள், மண்டகப்படி, நன்கொடை, அர்ச்சனை மற்றும் இதர கட்டணம், அபிஷேக கட்டணம், முதலீடு மூலம் வரும் முதலீடு வட்டி, வைப்பு தொகை வட்டி, இதர வகை வட்டி, பிரசாதம் விற்பனை மூலம் வரும் ஏலம் வரவு, அபராதங்கள், அசையா சொத்து விற்பனை வரவு, குறிப்பிட்ட கட்டளைக்காக வரவு, கடன் வசூலித்தது, கடன் வரவு, முன்பணம் வரவு, குத்தகை வைப்பு தொகை, பிணை வைப்பு தொகை, திருவிழா முன்பணம் வரவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kumarakuruparan , Temple, Revenue Information, Commissioner Kumarakuruparan,
× RELATED திருக்கோயில்களை பழமை மாறாமல்...