×

மருத்துவ கட்டுமான பிரிவில் 2 தலைமை பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் பொதுப்பணித்துறையில் மாநிலம் முழுவதும் மருத்துவ கட்டுமான பராமரிப்பு பிரிவு உள்ளது. இந்த பிரிவு, மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அந்தெந்த மண்டலங்களின் தலைமை பொறியாளரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறுகிறது. தற்போது, இந்த மருத்துவ கட்டுமான பிரிவுக்கு 8 கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளனர். இவர்கள், மேற்பார்வையில் நடைபெறும் பணிகளை இனி வருங்காலங்களில் மருத்துவ கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் தான் கண்காணிப்பாளர். மாநிலம் முழுவதும் நடைபெறும் புதிய மருத்துவ கல்லூரி கட்டுமான பணி மற்றும் மருத்துவமனைகளின் பணிகளை அந்த தலைமை பொறியாளரின் கண்காணிப்பின் கீழ் தான் நடக்கிறது.

அதே போன்று திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவிலும் கண்காணிப்பு பொறியாளரின் கீழ் அனைத்து வகையான கட்டுமான பணிகள் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, சென்னையில் தனியாக திட்ட வடிவமைப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பலரும் ரூ.2 கோடிக்கு மேல் பணிகளுக்காக ஒப்புதல் பெற சென்னை வர வேண்டியிருந்தது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் திட்ட வடிவமைப்பு பிரிவுக்கான கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்கள் அந்தெந்த மண்டலங்களில் ஏற்படுத்தப்படுகிறது. இந்த பிரிவு மூலம் நடக்கும் கட்டுமான பணிகளுக்கான வடிவமைப்பு பணிகளை தலைமை பொறியாளர் கண்காணிக்கிறார்.

 மேலும், திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவுக்கு அந்தந்த மண்டலங்களில் மண்டலங்களில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக வடிவமைப்பு ேபாடப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த 2 தலைமை பொறியாளர் பணியிடங்கள் ஏற்படுத்துவதன் மூலம் பொதுப்பணித்துறை கட்டமைப்புகள் மேலும் வலுப்பெறும். எனவே, தான் மருத்துவ கட்டுமானம் பிரிவுக்கும், திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவுக்கும் புதிதாக தலைமை பொறியாளர் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Medical Construction Division, Chief Engineer, Government of Tamil Nadu
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...