5ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் புதன்கிழமை (5ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: