விருத்தாசலம் தாலுகா அலுவலக குப்பைமேட்டில் குவிந்து கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்

விருத்தாசலம்: விருததாசலம் தாலுகா அலுவலக குப்பைமேட்டில் குவிந்து கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான பிரிவு இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலுவலகம் எதிரே உள்ள குப்பை மேட்டில் குப்பைகள் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும் ஒரே பெயர் விலாசம் கொண்ட அடையாள அட்டைகள், அடையாள அட்டைகள் விண்ணப்பித்ததற்கான வரிசை எண்களுடன் கூடிய ரசீதுகளுடன் ரப்பர் பேண்ட் போட்டு கட்டுக்கட்டாக கிடந்தன. இதுகுறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: