×

நாகை அருகே கடல் அரிப்பால் ஒரு கிராமமே மூழ்கும் அபாயம்: 150 அடிக்கு கடல்நீர் புகுந்தது

நாகை: நாளுக்கு நாள் கடல் அரிப்பு அதிகரிப்பதால் நாகை கல்லார் கிராமம் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. நேற்று 150 அடிக்கு கடல்நீர் உள்புகுந்தது. நாகை கல்லார் கிராமத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்குள்ளவர்கள் 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு மீன்பிடியே பிராதன தொழிலாக இருப்பதால் கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்தி சீர்செய்தல், வலை பின்னுதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

மேலும் கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் வீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கல்லார் கிராமத்தில் கடலரிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்லார் கிராமத்தில் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 50 அடி தூரம் தள்ளி கடல் இருந்தது. ஆனால் தற்போது கொட்டப்பட்டுள்ள கற்களை தாண்டி 100 அடி தூரம் கடல் நீர் வந்துள்ளது. அதாவது 150 அடிக்கு கடல் நீர் உள்ளே வந்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் கடல் நீர் உள்புகுவதால் கல்லார் கிராமம் விரைவில் கடலில் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இது குறித்து கல்லார் கிராமத்தினர் கூறியதாவது: கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் 150 அடிக்கு கடல்நீர் உள்ளே வந்துள்ளது. இயற்கை சீற்ற காலங்களில் இன்னும் அதிக அளவிற்கு கடல்நீர் உள்ளே வருகிறது. இதே நிலை நீடித்தால் கடல் நீரில் கல்லார் கிராமம் மூழ்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தற்பொழுது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்தை கடல் நீர் அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கூறினர்.

Tags : Naga , Extreme levels of flood danger were announced in at least 150 places
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா