பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பேரூராட்சி தேர்தலில் போட்டி யிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்கானல் நடைபெறுவதாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், ஆரணி ஆகிய பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் கீழ்கண்ட விவரப்படி குறித்த நேரத்தில் கவரைப்பேட்டை, ஜெ.எம்.திருமண மண்டபத்தில்நடைபெற உள்ளது. எனவே இன்று (3ம் தேதி) காலை 9 மணியளவில் கும்மிடிப்பூண்டி பேரூர், காலை 11 மணியளவில் ஊத்துக்கோட்டை பேரூர், பிற்பகல் 2 மணியளவில் ஆரணி பேரூர், மாலை 4 மணியளவில் மீஞ்சூர் பேரூர் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயலாளர்கள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முறையாக தகவல் தெரிவித்து நேர்காணலில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: