ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் வேட்டி வாரம் துவக்கம்

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதல் தேதி புத்தம் புது அறிமுகங்களுடன் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ‘ராம்ராஜ் வேட்டி வாரம் 2022’ நேற்று முன்தினம் துவங்கியது.

இந்த ஆண்டு ராம்ராஜ் வேட்டி வாரத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், வேட்டி கலாசாரத்தை நம் இளைஞர் மத்தியில் கொண்டுவர வேட்டியுடன் இணைந்து டி சர்ட் ஒன்றை ஏழு வண்ணங்களில் ராம்ராஜ் நிறுவனம் வழங்க உள்ளது.

காட்டன் வேட்டியுடன் இணைந்து உயர் ரக பருத்தியிலிருந்து தயாரான  டீ- சர்ட்டுகள் மற்ற நாட்களில் ரூ.995 விற்கப்படுகின்றன. ‘ராம்ராஜ் வேட்டி வாரம் 2022’ முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ரூ.795க்கு விற்கப்படுகிறது. இந்த காம்போ ரக வேட்டி வார சிறப்பு விற்பனை முன்னணி நிறுவனங்களிலும் மற்றும் ராம்ராஜ் நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்களிலும் விற்பனையாகும்.

Related Stories: